Pages

இந்த வலைப்பூவை தொடர்ந்து மு(நு)கரும் அன்பு நெஞ்சங்கள்

Sunday, January 27, 2013

விமர்சனம்:1 ஆக்கம்:-க.சரவணன்,

உங்களுக்காக சேவை செய்ய ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ஒவ்வொரு தேர்தலுக்கும் (நிரந்தர) வாக்குறுதி கொடுத்துக்கொண்டே இருக்கும் நம் நாட்டின் அரசியல் வியாதிகளுக்கு மொத்தமாக ஆப்படிக்கும்படி இப்படியா ஒரு ஆப்ரேஷன் திட்டம் தீட்டுவது?



நீங்கள் சொல்வது போல் எல்லாம் நிறைவேற்றிவிட்டால் அப்புறம் நார்வே நாடு போல் சின்ன குழந்தைகளுக்கு கூட ஜனாதிபதி அளவுக்கு இசட் பாதுகாப்புடன், கோடீஸ்வர பெருமுதலாளிகளின் எல்லா சொத்துக்களையும் ஆளப்பிறந்த ஒரே வாரிசுக்குரிய சுகபோகத்துடன் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் வாழ்ந்து கொண்டிருப்பான்.



இதற்குத்தானா இந்த அரசியல் வியாதிகள் இவ்வளவு சிரமப்பட்டு நாட்டைக் கெடுத்து நாட்டு மக்களை முழு நேர குடிகாரர்களாக்கும் தொலை நோக்கு பார்வையுடன், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்புக்கு பொதுஜனத்தை அல்லல் படவைத்து, சாலைகளில் சுங்கம் முதல் குடிக்கும் நீருக்கு பணம் வரை கடைசி சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சி அப்படி செத்து விழும் பொது ஜனத்தையும் புதைக்க ஆகும் செலவை மற்றொரு பொது ஜனத்திடம்  இருந்தே வரியாக வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள்?



இளைய சமுதாயத்தின் கவனத்தை தொலைக்காட்சி, மது, கேளிக்கை பக்கம் மட்டும் திட்டமிட்டு திருப்பிவிட்டு, நூலகம் மற்றும் வாசிப்பு அனுபவத்தை அவர்கள் மனதில் தோன்றச்செய்யாமல் வைத்திருப்பது மட்டுமே இப்போது அரசியல் வியாதிகளின் ஒரே ஒரு முக்கியமான ஆயுதம்.



குறைந்தது 60 சதவீத இளையதலைமுறையாவது படித்து (பாடப்புத்தகத்தை மட்டும் அல்ல) சிந்திக்கத்தொடங்கினால் மட்டுமே உங்களுடைய ஆப்ரேஷன் 2000 திட்டத்தை எங்கள் உரிமை என்று கேட்டுப் பெறும் காலம் வரும்.


No comments:

Post a Comment